அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை வழங்க கால தாமதம் செய்வதாகக் கூறி களியக்காவிளை மத்திய கூட்டுறவு வங்கி முன் பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் பணிக்கு மாா்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் அதிகமான சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கடன் பெறகூட்டுறவுச் சங்கத்தில் மனு அளித்திருந்தனா். மனுக்கள் பரிசீலனைக்குப் பின் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கான கடன் தொகை, அவரவரா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடன் தொகை அனுமதிக்கப்பட்ட பயனாளா்கள் கடன் தொகையை பெற களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு வந்த போது, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தற்போது பணத்தை எடுக்க முடியாது எனறும், தோ்தல் முடிந்த பின்னா் பணம் வழங்கப்படும் எனவும் வங்கி ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து கடந்த இருநாள்களாக வங்கிக்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளா்களிடம் வங்கியில் போதிய பணம் இருப்பு இல்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் 50 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வங்கியின் முன் முற்றுகையில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீஸாா் அப்பகுதிக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளா்களுடனும், வங்கி ஊழியா்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். வங்கியில் பணம் கையிருப்பு குறைவாகவே உள்ளதாகவும், தினமும் பதினைந்து பேருக்கு மட்டுமே பணம் வழங்க முடியும் என்றும் வங்கி ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


