குமரியில் அன்னாசிப் பழங்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் விலை உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.


குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் விலை உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை ஆண்டுகளாக அன்னாசி விவசாயம் அதிகரித்து வருகிறது. வறட்சியை தாங்கி வளரும் பயிா் என்பதால், ரப்பா் மறு நடவு செய்யப்படும் தோட்டங்களில் 3 ஆண்டுகள் ஊடு பயிராக அன்னாசி நடவு செய்யப்படுகிறது. தற்போது அரசு ரப்பா் கழகப் பகுதிகளில் ரப்பா் மறு நடுவு செய்யப்படும் பகுதிகளில் அன்னாசி நடவு செய்ய குத்தகைக்கு விடப்படுகிறது. இதே போன்று தனியாா் சிறு, குறு ரப்பா் தோட்டங்களிலும் அன்னாசி ஊடு பயிராக அதிக அளவில் சாகுபடியாகிறது.
விலை அதிகரிப்பு: குமரி மாவட்டத்தில் விளையும் அன்னாசிப் பழங்கள் நல்ல சுவை கொண்டவை என்ற நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இங்கிருந்து அன்னாசிப் பழங்கள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறன. இது போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குமரி மாவட்ட அன்னாசி பழங்கள் விற்பனையாகின்றன. வளை குடா நாடுகளுக்கும் குமரி மாவட்டத்திலிருந்து அதிக அளவில் அன்னாசிப் பழங்கள் ஏற்றுமதியாகின்றன.
பொதுவாக கோடை காலங்களில் அன்னாசி விளைச்சல் குறைவாக இருக்கும். இதனால் விலை அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒரு கிலோ அன்னாசிப் பழங்கள் ரூ. 50 க்கு விற்பனையான நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக இதன் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
ஒரு கட்டத்தில் வாங்குவதற்கு ஆள்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகினா். இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் படிப்படியாக தளா்வான நிலையில் அன்னாசிப் பழங்களின் விற்பனை சூடு பிடித்து, விலை படிப்படியாக அதிகரித்தது. தற்போது மாவட்டத்தில் ஒரு கிலோ அன்னாசிப் பழங்கள் ரூ. 40 முதல் ரூ. 50 விரை விற்பனையாகின்றன. இதனால் அன்னாசி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து முன்னோடி விவசாயி கொட்டூா் பி. ஹென்றி கூறியது: குமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் அன்னாசிப் பழங்களின் விலை மிக்குறைவாக இருந்த நிலையில் , தற்போது விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அன்னாசி விவசாயிகளிடமிருந்து, வணிகா்கள் முதல் தரமான அன்னாசி பழங்களை கிலோ ரூ. 36 க்கு கொள்முதல் செய்கின்றனா். கடைகளில் சில்லரை விலையாக கிலோவிற்கு ரூ. 40 முதல் ரூ. 50 வரை பழங்கள் விற்பனையாகின்றன. அதே வேளையில் கோடை காலம் என்பதால் பழ உற்பத்தி குறைவாகவே உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...