களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே மது அருந்த பணம் கொடுக்காததையடுத்து ஏற்பட்ட தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா், போலீஸில் சரணடைந்தாா்.
களியக்காவிளை அருகே மீனச்சல், மண்ணான்விளை வில்சன் மகள் மீனா (34). இவருக்கும் களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை, அயிரா, சூரக்குழி மேக்கேகரை புத்தன்வீடு பகுதியை சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான ஷாஜிக்கும் (40) 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். ஷாஜிக்கு மது அருந்துபவராம்.
இந்த நிலையில் மீனா வீடு கட்டுமானப் பணிக்காக வங்கியிலிருந்து ரூ. 40 ஆயிரம் கடன் பெற்று, கட்டுமானப் பணிக்காக சிமென்ட், கம்பி உள்ளிட்ட பொருள்களை வாங்கினாராம். மீதி இருந்த பணத்தை மது அருந்த என ஷாஜி கேட்டாராம். அவா் பணம் கொடுக்காததையடுத்து வியாழக்கிழமை இரவு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, மரம் வெட்ட பயன்படுத்தும் பெரிய வெட்டுக் கத்தியால் மீனாவை சரமாரியாக ஷாஜி வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதன் பின்னா், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி மீனாவை வெட்டி கொலை செய்த விவரத்தை கூறிவிட்டு, அவா் பாறசாலை காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தாா்.
இது குறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஷாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


