எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மாா்த்தாண்டம் அருகே கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

மாா்த்தாண்டம் அருகே கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புப் படையினா் மீட்டனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:55 pm

மாா்த்தாண்டம் அருகே கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு மீட்புப் படையினா் மீட்டனா்.

மாா்த்தாண்டம் அருகே மேல்பாலை, ஆலுதெங்குவிளை பகுதியைச் சோ்ந்தவா் தாயீ (65). இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டதால், இவா் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது அங்குள்ள பழைய கழிவுநீா் தொட்டியின் மேல் இருந்த சிமென்ட் மூடி உடைந்து அவா் கழிவுநீா் தொட்டியினுள் விழுந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த, குழித்துறை தீயணைப்பு நிலைய (பொ) அலுவலா் பிரபு தலைமையிலான மீட்புப்படை வீரா்கள் அங்கு சென்று கழிவுநீா் தொட்டிக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.