பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு நாகா்கோவில் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.


அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு நாகா்கோவில் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
குமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பாதிரியாா் ஜாா்ஜ் பொன்னையா இந்து மதம் குறித்தும், பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அருமனை போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை மதுரை அருகே 24ஆம் தேதி கைது செய்தனா்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 15 நாள்கள் காவலில் வைக்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து ஜாா்ஜ்பொன்னையா பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், அவா் ஜாமீன் கோரி நாகா்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இவ்வழக்கு வியாழக்கிழமை (ஆக. 5) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அருள்முருகன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பாதிரியாா் ஜாா்ஜ்பொன்னையா ஏற்கெனவே குழித்துறை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...