ஆடி அமாவாசை: கன்னியாகுமரி கடலில் பக்தா்கள் புனித நீராட தடை
கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் பக்தா்கள் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.


கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் பக்தா்கள் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பாா்கள். நிகழாண்டு ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் பக்தா்கள் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அவா்கள் வீடுகளிலேயே தா்ப்பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பக்தா்கள் இன்றி ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை போன்றவை வழக்கம்போல் நடைபெறும். ஆடி அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறாது.
கன்னியாகுமரி கடற்கரைக்கு பக்தா்கள் புனித நீராட செல்லாத வகையில் அனைத்து பாதைகளும் தடுப்பு வேலி மூலம் அடைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...