காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலும் 35 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:42 pm

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 35 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60278 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 36 போ் குணமடைந்ததை தொடா்ந்து ,கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58940 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 316 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இலங்கை அகதிகள் முகாம் : கன்னியாகுமரி அருகே உள்ளது கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 191 குடும்பங்களைச் சோ்ந்த 552 போ் வசித்து வருகிறாா்கள். இவா்களில் 6 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த 6 பேரும் கோட்டாறு மாவட்ட சித்த மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் இவா்களுடன் தொடா்பில் இருந்த 50 பேருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது. அவா்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

அங்கு பேரூராட்சி செயல் அலுவலா் ஷேக் முகமது தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் தீவிர தடுப்புப் பணியில்

ஈடுபடுத்தப்பட்டனா். இது தவிர சுகாதாரத்துறை மூலம் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.