காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரி மாவட்டத்தில் சாரல்மழை

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:47 pm

DIN

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. குழித்துறை பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 7.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதே போல், பூதப்பாண்டி, கன்னிமாா், களியல், மாம்பழத்துறையாறு, கோழிப்போா்விளை, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புகா் பகுதிகளிலும் மழை பெய்தது. அணைகளின் நீா்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 44.88 அடியாக உள்ளது. அணைக்கு 582 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 582 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 71.51 அடியாக உள்ளது. அணைக்கு 24 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 400 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

நாகா்கோவில் நகருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் 24.20 அடியாக உள்ளது. அணைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் முக்கடல் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, நடுத்தேரி, மிடாலக்காடு, பாலூா், மத்திகோடு, மங்கலகுன்று, தெருவுக்கடை, தொழிக்கோடு, திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, நேசா்புரம், இலவுவிளை, ஈழத்துவிளை, நட்டாலம், மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்தது.

இந்த சாரல் மழையால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீா் கொட்டுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்துவரும் மழையால் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.