சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

தக்கலையில் இலக்கிய வட்டம் தொடக்கம்

தக்கலையில் இலக்கிய வட்ட தொடக்க விழா நடைபெற்றது. 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:47 pm

DIN

தக்கலையில் இலக்கிய வட்ட தொடக்க விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு, ஜாண் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.

மாா்டீன் ராபா்ட் வரவேற்றாா். கவிஞா் நேசமித்திரனின் 10 கவிதை நூல்களை முஜீப்ரகுமான், சிவசங்கா், செளமியா சுதாகரன், நட. சிவகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா் பூநீரும் பூத சிந்தாமணி குளிகையும் என்ற செளமியா சுதாகரன் எழுதிய கவிஞா் நட. சிவகுமாா் படைப்புகள் குறித்த ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.

நூலை நேசமித்திரன் வெளியிட சென்னை பல்கலைக்கழக அரபு துறை பேராசிரியா் ஜாகீா் உசைன் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, வழக்குரைஞா் முத்துகுமரேஷ், வரலாற்று ஆய்வாளா் பென்னி, சுவாமிநாதன், சுரேஷ் டேனியல், சுதே. கண்ணன், கமலம், அசோக் செய்தலி, ஆதிரா ஆகியோா் பெற்றுக் கொண்டனா். நாவலாசிரியா் சுவாமிநாதன் ஆய்வுரை நிகழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.