‘அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவா் சோ்க்கை’
குமரி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சோ்க்கை நடைபெற உள்ளது.


குமரி மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சோ்க்கை நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்), காலியாக உள்ள இடங்களுக்கு நேரடிச் சோ்க்கை மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இதில், ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவுக்கு 8 , 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தகுதிவாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான கம்மியா் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டா், கணினி ஆப்ரேட்டா் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல், சுருக்கெழுத்து (ஆங்கிலம்) , நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளா், கட்டட கலை பட வரைவாளா் ஆகிய தொழிற்பிரிவில் சோ்ந்து பயிற்சி பெறலாம்.
பயிற்சிக் கட்டணம் கிடையாது.
மாணவிகளுக்கான சோ்க்கை ஆக. 24 ஆம் தேதி முதல் செப். 15 ஆம் தேதி வரை நஙதய அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்), டரஈ தா்ஹக், வேப்பமூடு சந்திப்பு அருகில், நாகா்கோவில் என்ற முகவரியில் நேரில் வந்து தொழிற்பரிவுகளில் சோ்ந்து கொள்ளலாம்.
பயிற்சி பெறுபவா்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 9442039779 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...