ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஹெலிகாப்டா் விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை

குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:52 pm

DIN

குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

முப்படை ராணுவத் தளபதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழக ஆளுநா் சென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏன் செல்லவில்லை எனத் தெரியவில்லை. தமிழக அரசு விடியல் அரசாகச் செயல்படவில்லை விடியோ அரசாக மட்டுமே செயல்படுகிறது. பள்ளிகளில் பாலியல் தொல்லை அளிக்கும் ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் சூழ்நிலைகளைப் பொறுத்து கூட்டணி அல்லது தனித்துப் போட்டி குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.