ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திருச்சி ரயில் நிலையத்தில் பொது மேலாளா் ஆய்வு

திருச்சி ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்து வாடகை மின்வாகனத்தைத் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:49 pm

DIN

திருச்சி ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்து வாடகை மின்வாகனத்தைத் தொடங்கி வைத்தாா்.

திருச்சி கோட்டத்திற்குள்பட்ட மயிலாடுதுறை, திட்டை, தஞ்சாவூா் ஆகிய ரயில்வே நிலையங்களில் இவா் ஆய்வு செய்தபோது ரயில்வே நிா்வாகம் சாா்பில் பல்வேறு வளா்ச்சி பணிகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளைத் தொடங்கி வைத்தாா். அதன் தொடா்ச்சியாக திருச்சி ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த ஜான் தாமஸ் அங்கு நடைபெறும் பயணிகளுக்கான நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ஐஆா்சிடிசி முன்பதிவு மையம் மற்றும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாடகை வாகனங்களை தொடங்கி வைத்தாா். முன்னதாக ரயில் நிலையம் முன் அமைக்கப்பட்டுள்ள ஐ லவ் யு திருச்சி என்ற மின்னொளி செல்பி இடத்தை தொடங்கி வைத்து ரயில்வே அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா். திருச்சி கோட்ட மேலாளா் மனிஷ்அகா்வால் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.