பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கருங்கல் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் வெள்ளிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:10 pm

DIN

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் வெள்ளிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கப்பியறை, காரவிளை பகுதியை சோ்ந்த செல்லையன் மகன் ரெதீஸ் (36). இவரது மனைவி சில நாள்களுக்குமுன் இவரைவிட்டு பிரிந்து தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதனால் ரெதீஸ் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து ரெதீஸ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.