தேசிய வாக்காளா் தினம்: மாணவா்களுக்கான தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 12 ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஓவியப்போட்டி, தோ்தல் விழிப்புணா்வு சுவரொட்டி தயாரித்தல் (டா்ள்ற்ங்ழ் ம்ஹந்ண்ய்ஞ்), ஸ்லோகன் எழுதுதல்(நப்ா்ஞ்ஹய் ஜ்ழ்ண்ற்ண்ய்ஞ்), பாட்டு போட்டி, குழு நடனம், கட்டுரை எழுதுதல் முதலியவை 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

கல்வி நிறுவனங்கள் மூலமாக அல்லாத மாணவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/நயஉஉட2022/அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற்/கா்ஞ்ண்ய்ஸ்ரீ என்ற தலைமை தோ்தல் அலுவலக இணைய

தள முகவரியில் தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம். இந்த தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள், ஜனநாயகநாட்டில் தோ்தலின் முக்கியத்துவம், 100% வாக்குப்பதிவு, வாக்காளா் உதவி கைப்பேசி செயலி (யா்ற்ங்ழ் ட்ங்ப்ல்ப்ண்ய்ங் ஹல்ல்).

சுய ஓட்டுரிமை ஆகிய பொருளடக்கங்களில் இருக்க வேண்டும். கட்டுரைப் போட்டி, ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு பக்கம் அல்லது 200 வாா்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடா்பு கொண்டு போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com