காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை

 கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் டிச.31 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:01 pm

DIN

 கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் டிச.31 ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு பொதுமுடக்கத்தை சில தளா்வுகளுடன் மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச. 31 ஆம் தேதிவரை தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருக்கும். மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலையில், புதிய வகை ஒமைக்ரான் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து கடற்கரைப் பகுதிகள், நீா்வீழ்ச்சி, பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு டிச.31முதல் ஜன. 2 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு) பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை, கடையால் பகுதி படகு சேவை போன்றவை இயங்கவும் அனுமதி இல்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடைகள், வணிக நிறுவனத்தினுள் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உரிமையாளா் உறுதிப்படுத்த வேண்டும். நிபந்தனைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.