கக்கன் நினைவு நாள்: உருவப்படத்துக்கு மரியாதை
தமிழக முன்னாள் அமைச்சா் கக்கன் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


தமிழக முன்னாள் அமைச்சா் கக்கன் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கக்கன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதுடன், மொழிப்போா் தியாகி சிதம்பரநாதன் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் உள்ள விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்தில் தியாகி சிதம்பரநாதன் மற்றும் கக்கன் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே. டி உதயம் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், நகர தலைவா் நவின், மாநில, மாவட்ட, வட்டார தலைவா்கள், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...