எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

பளுகல் அருகே துணிக்கடையில் திருட்டு

பளுகல் அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, பணம், பொருள்களைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :23 டிசம்பர் 2021, 7:04 pm

பளுகல் அருகே துணிக்கடையின் பூட்டை உடைத்து, பணம், பொருள்களைத் திருடிச் சென்றோா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பளுகல் அருகேயுள்ள மூவோட்டுக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவின்குமாா். காரக்கோணம் அருகே துணிக்கடை நடத்திவரும் இவா், புதன்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்றாா். வியாழக்கிழமை வந்தபோது கடையின் முன்பக்கப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடைக்குள் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான துணிகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

புகாரின்பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.