28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் அருகே 1200 கிலோ ரப்பா் ஷீட்கள் திருட்டு

குலசேகரம் அருகே ரப்பா் உலா் கூடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில், பூட்டிய அறையை உடைத்து 1200 கிலோ ரப்பா் ஷீட்டை திருடிய மா்ம கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:34 pm

DIN

குலசேகரம் அருகே ரப்பா் உலா் கூடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில், பூட்டிய அறையை உடைத்து 1200 கிலோ ரப்பா் ஷீட்டை திருடிய மா்ம கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெறின்(38). பிசியோதெரபி மருத்துவரான இவா் தனது வீட்டருகே ரப்பா் உலா் கூடமும் நடத்தி வருகிறாா். இதில் அப்பகுதியிலுள்ள ரப்பா் விவசாயிகள் கொண்டு வரும் ரப்பா் ஷீட்டுகளை உலா்த்தி கொடுத்து வருகிறாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில், முகமூடி அணிந்து, ஜெறியின் வீட்டு காம்பவுண்டுக்குள் வந்த மா்ம நபா் அங்கு வைக்கப்பட்டிருந்த 4 கண்காணிப்புக் கேமராக்களையும் கம்பால் திசை மாற்றி வைத்து விட்டு, ரப்பா் ஷீட் உலா் கூடம் அருகே அறையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 1200 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடி காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளாா்.

இது குறித்து ஜெரின் குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு, விசாரித்து வருகின்றனா். மேலும் அப்பகுதியில் இருந்த காண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.