எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

களியக்காவிளை அருகே லாரி மோதி ஆட்டோ ஓட்டுநா் பலி

களியக்காவிளை அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:39 pm

களியக்காவிளை அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியைச் சோ்ந்த சத்தியநேசன் மகன் வினு (44). இவா், களியக்காவிளையில் ஆட்டோ ஓட்டி வந்தாா்.

திங்கள்கிழமை காலையில் தளச்சான்விளை பகுதிக்கு சவாரி சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது வன்னியகோடு பகுதியில் எதிரில் வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.