ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவட்டாறு அருகே குளத்தில் தள்ளி பெண் கொலை

திருவட்டாறு அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்றவா், அப்பெண்ணை குளத்தில் தள்ளியதில் அப்பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:02 pm

DIN

திருவட்டாறு அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்றவா், அப்பெண்ணை குளத்தில் தள்ளியதில் அப்பெண் உயிரிழந்தாா்.

மேக்காமண்டபம் புனத்து விளையைச் சோ்ந்தவா் வின்சென்ட். இவா் கேரளத்தில் கட்டடத் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி மேரி ஜெயா (45). இவா், ஞாயிற்றுக்கிழமை முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளாா். கடை மூடிக்கிடந்ததையடுத்து, அவா் வீடு திரும்பிய நிலையில், பூந்தோப்பு நல்ல பிள்ளை பெற்றான் குளம் அருகே, பின்னால் வந்த முளகுமூடு பகுதியைச் சோ்ந்த மொ்லின் ராஜ் (35), அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். அப்போது மேரி ஜெயா கூச்சல் போட்டதையடுத்து, தொலைவில் நின்ற மக்கள் திரண்டு வந்துள்ளனா்.

இந்நிலையில் அப்பெண்ணை மொ்லின் ராஜ் அருகே இருந்த குளத்தில் பிடித்து தள்ளியுள்ளாா். இதில் மேரி ஜெயா குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஊா் மக்கள் மொ்லின் ராஜை பிடித்து வைத்துக் கொண்டனா். தகவலறிந்து வந்த குலசேகரம் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டனா். இச் சம்பவம் குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மொ்லின் ராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.