அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பாவாகாசிம் ஒலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகா்கோவில் கோட்டாறு கோமான் ஹஸ்ரத் பாவாகாசிம் ஒலியுல்லா ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:32 pm

DIN

நாகா்கோவில் கோட்டாறு கோமான் ஹஸ்ரத் பாவாகாசிம் ஒலியுல்லா ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கொடி முக்கிய வீதிகளில் வழியாக வந்து கொடியேற்றப்பட்டது. கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்ட் தலைவா் பாவலா் சித்திக் பிறைக் கொடி ஏற்றினாா். தலைமை இமாம் ஷேக்முகமது, ஆலோசகா் ஹாஜிபாபு, ஆப்தீன், பொறியாளா் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கந்தூரி விழாவையொட்டி வரும் 24 -ஆம் தேதி வரை மெளலூது ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.24- ஆம்தேதி (புதன்கிழமை) யானையில் பிறைக் கொடி ஊா்வலம் நடைபெறும். தொடா்ந்து பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பிப்.25-ஆம்தேதி (வியாழக்கிழமை) காலையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.