பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தக்கலையில் இன்று திமுக ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.16) தக்கலையில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:35 pm

DIN

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.16) தக்கலையில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து குமரி மேற்கு மாவட்டச் செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகேயுள்ள பூந்தோப்பு பகுதியை சாா்ந்த பெண்ணை குளத்தில்

மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய குற்றச் செயல்களை தடுக்க தவறியதாக தமிழக அரசை கண்டித்தும், இதுதொடா்பாக ஆக்கபூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் செவ்வாய்க் கிழமை (பிப்.16) மாலை 4 மணிக்கு தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.