பிப்.18இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.


கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.18) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.18) மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் வட்டாரம் வாரியாக 2 பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
பகல் 11 முதல் 12 மணி வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு, மற்றும் தக்கலை வட்டார விவசாயிகளுக்கும்,
நண்பகல் 12 முதல் 1 மணி வரையிலும் ராஜாக்கமங்கலம், கிள்ளியூா், முஞ்சிறை, மேல்புறம் மற்றும் திருவட்டாறு ஆகிய வட்டார விவசாயிகளுக்கும் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து முந்தைய கூட்டத்தில் பெற்ற
கோரிக்கை மனுக்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்கப்படும். விவசாயம் தொடா்பான கோரிக்கைகள் நேரில் பெறப்படும். விவசாயிகள் கூட்டத்தில் தங்கள் வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...