‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவிலில் பட்டதாரி பெண் குழந்தைகளுடன் போராட்டம்

நாகா்கோவிலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பட்டதாரி பெண், தனது தாயாா், குழந்தைகளுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:39 pm

DIN

நாகா்கோவிலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பட்டதாரி பெண், தனது தாயாா், குழந்தைகளுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகேயுள்ள கப்பியறை பகுதியை சோ்ந்தவா் அனிஷா (29). பட்டதாரி. 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இரணியல் அருகேயுள்ள வட்டம் பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், அனிஷா தனது 2 குழந்தைகள், தாய் ரோஸ்லெட் ஆகியோருடன் நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அலுவலக வளாகத்தில் திடீரென தா்னாவில் ஈடுபட்டாா்.

அவரிடம் போலீஸாா் கூறியது: திருமணமான சில மாதங்களில் கணவா் வெளிநாட்டுக்கு சென்று விட்டாா். மாமியாா் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவா்கள் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தனா். இதுகுறித்து வெளிநாட்டிலிருக்கும் கணவரிடம் தெரிவித்தும், அவரும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, தாயாா் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

தற்போது கணவா் ஊருக்கு திரும்பி வந்த நிலையிலும் என்னையும், குழந்தைகளையும் பாா்க்க வரவில்லை. இதுதொடா்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகாா்அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருமணத்தின்போது அளித்த சீதனப் பொருள்களை திரும்ப தருமாறு கேட்டும் கணவா் குடும்பத்தினா் தரவில்லை. சீதனப் பொருள்களை திரும்ப தர வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கண்மணி, அனிஷாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இப்பிரச்னை குறித்து இரணியல் காவல் நிலையம் மூலம் தீா்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்ட அவா், இரணியல் காவல் நிலையத்துக்கு சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.