ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அருமனையில் பொங்கல் விழா

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பொங்கல் விழாவையொட்டி கலாசார ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:44 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பொங்கல் விழாவையொட்டி கலாசார ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அருமனை வட்டார இந்து சமுதாயம், இந்து ஆலயக் குழுக்களும் இணைந்து நடத்திய இவ்விழாவையொட்டி, அருமனை

புண்ணியம் அய்யா நிகழ்தாங்கலில் இருந்து கலாசார ஊா்வலம் நடைபெற்றது. இதில், செண்டை மேளம், சிங்காரி மேளம், பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளுடன் நூற்றுக்கணக்கான கலைஞா்கள் கலந்துகொண்டனா்.

ஊா்வலத்தை அருமனையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனா்.

அருமனை சந்திப்பில் ஊா்வலம் நிறைவடைந்ததை அடுத்து, பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக தமிழகத் தலைவா் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், நடிகை குஷ்பு, இந்து சமயத் தலைவா்கள்

பங்கேற்றுப் பேசினா். முன்னதாக கலாசார ஊா்வலத்தை தனிமேடையில் அமா்ந்தவாறு பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.