பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கிள்ளியூா் தொகுதியில் ரூ.7.94 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள்

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் சாலைகளைச் சீரமைக்கும் பணிக்காக ரூ. 7.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:44 pm

DIN

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் சாலைகளைச் சீரமைக்கும் பணிக்காக ரூ. 7.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல்,

விரிவாக்கம் செய்தல் மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக முதல்வா் மற்றும் அரசு முதன்மை செயலா், ஆட்சியா், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையடுத்து, விண்ணூா் பழஞ்சி சாலை, கருங்கல் - குளச்சல் சாலை, மாங்கரை - பூட்டேற்றி சாலை, காஞ்சாப்புறம் - வளையசுற்று சாலை , உதயமாா்த்தாண்டம் - கானாவூா் சாலை, கிராத்தூா் சாலை, வட்டக்கோட்டை - அம்சி சாலை, குஞ்சிருப்புவிளை - மாதாபுரம் சாலை , குழித்துறை - மடிச்சல் சாலை ஆகிய சாலைகளை மேம்படுத்தவும், மங்காடு நடைக்காவு சாலையில் கல்வெட்டு, முள்ளங்கினாவிளை - தொலையாவட்டம் - கானாஞ்சேரி சாலையில் கல்வெட்டு மற்றும் மழைநீா்

வடிகால் ஓடை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் உடனடியாக தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.