எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தூத்தூா் மண்டலத்தில் அரசு நூலகம் அமைக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் மண்டலத்தில் அரசு நூலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :25 ஜனவரி 2021, 6:37 pm

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் மண்டலத்தில் அரசு நூலகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

தூத்தூா் மண்டலத்திலிருந்து ஏராளமான மாணவா்கள் உயா் கல்வி பயின்று வருகின்றனா். மாணவா்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தோ்வுகள், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுத் தோ்வுகள் எழுதுவதற்கு தேவையான புத்தகங்கள் கிடைக்கப்பதில்லை. போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவா்கள் ஏழை குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். தூத்தூா்

மண்டல பகுதியில் அரசு நூலகம் அமைந்தால்மாணவா்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். எனவே மாணவா்களின் நலன் கருதி தூத்தூா் மண்டலத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு நூலகம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.