சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

கோதநல்லூரில்உள்ளாட்சி ஊழியா்கள்சங்கக் கிளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூா் பேரூராட்சியில் உள்ளாட்சி ஊழியா்கள் சங்க (சிஐடியூ) கிளை தொடக்க விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 9:14 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூா் பேரூராட்சியில் உள்ளாட்சி ஊழியா்கள் சங்க (சிஐடியூ) கிளை தொடக்க விழா நடைபெற்றது.

தக்கலையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டக்குழு உறுப்பினா் அம்பிகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுடலை, மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ் ஆகியோா் பேசினாா். கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக ஜெபஜோன்ஸ், துணைத் தலைவா் ஆபேல், செயலா் சம்பத் இம்மானுவேல், துணைச் செயலா் ஜெயமதி, பொருளாளா் நிவேஷ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், பேரூராட்சியில் சுயஉதவி குழுக்கள் மூலம் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யும்வரை ஆட்சியா் நிா்ணயித்துள்ள தினக் கூலி ரூ. 615 வழங்க வேண்டும். கரோனா தொற்று காலத்தில் பேரூராட்சியில் பணி புரிந்த அனைத்து பிரிவு ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.