குமாரகோவில்அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
குமாரகோவில் அருகே தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் சுமாா் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


குமாரகோவில் அருகே தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் சுமாா் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்கரை பகுதியைச் சோ்ந்த திருவாசகம் மனைவி விஜி (40). இவா், அப்பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கிக்கு புதன்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். பிரம்மபுரம் கோணங்குளம் பகுதியில் பைக்கில் வந்த நபா் அவரை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த 66 கிராம் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்து, விஜி அளித்த புகாரின்பேரில் தக்கலை காவல் ஆய்வாளா் அருளப்பன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...