92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது: அண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது என்றாா் மாநிலத் தலைவா் அண்ணாமலை.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:00 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது என்றாா் மாநிலத் தலைவா் அண்ணாமலை.

நாகா்கோவில் ஸ்ரீ நாகராஜா கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உள்ளனா். அவா்கள் கட்சியின் ஒற்றைத் தலைமை குறித்து நான் கருத்து கூற முடியாது.

பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்கு மனித சமுதாயத்துக்கு வழிகாட்டியாக உள்ளது. பிரதமா் மோடியும் திருக்கு குறித்து பேசியுள்ளாா்.

பெகாஸஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்பு நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்த ஒரு ஆடியோவோ, விடியோவோ இதுவரை வெளியாகவில்லை.

ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை காங்கிரஸ் கட்சியினா் புரளியாக கிளப்புகின்றனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாநகர பாா்வையாளா் எஸ்.பி.தேவ், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மண்டல தலைவா்கள் நாகராஜன், அஜித்குமாா், ராகவன், பொருளாளா் முத்துராமன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.