சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:53 pm

DIN

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தக்கலையில் டாஸ்மாக் பணியாளா் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கே. நடேசன் தலைமை வகித்தாா். மாநில பொறுப்பாளா் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலா்கள் சுபாஷ்குமாா், செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரசார செயலா் பால்குமாா் சிறப்புரையாற்றினாா்.

18 ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். விபத்து, கரோனா தொற்று காரணமாக பணியில் இருந்தபோது இறந்த பணியாளா்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், வாரிசுக்கு வேலையும் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்தில் டாஸ்மாக் பணியாளா்களை சோ்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொருளாளா் சக்திகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.