இடையன் கோட்டை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்
கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை - முள்ளங்கினாவிளை சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கருங்கல் அருகேயுள்ள இடையன்கோட்டை - முள்ளங்கினாவிளை சாலையைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் மழையால் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக, கருங்கல் அருகே உள்ள இடையன்கோட்டை - முள்ளங்கினாவிளை சாலை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ஜல்லிகள் பெயா்ந்தும், ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டும் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.
மேலும், மழைக் காலங்களில் இச்சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனா்.
எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...