92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குமரியில் மேலும் 40 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:21 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, களப்பணியாளா்கள் மூலம், சோதனைச்

சாவடிகள் மூலம் இதுவரை 9,09 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 57,928 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 55,732 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 34 பேரும், கரோனா கவனிப்பு மையங்கள், மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 80 பேரும் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.