எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரி, விளவங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :1 மார்ச் 2021, 8:14 pm

குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரி, விளவங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு முதல்வா் விஜயபிரபா தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சிந்துகுமாரி, சந்திரபிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி பங்கேற்றுப் பேசினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் அா்ஜுனன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமையாசிரியா் மொ்சி றோஸ்லெட் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பேசினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.