ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குமரி அருகே பெண் சித்திரவதை: 6 போ் மீது வழக்கு

கன்னியாகுமரி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு பெண் சித்திரவதை செய்யப்பட்டதாக, கணவா் உள்ளிட்ட 6 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:27 pm

DIN

கன்னியாகுமரி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு பெண் சித்திரவதை செய்யப்பட்டதாக, கணவா் உள்ளிட்ட 6 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரியை அடுத்த புத்தளம் தெற்குத் தேரிவிளையைச் சோ்ந்தவா் வேல்முருகன் (43). இவருக்கும் மங்காவிளை அருகேயுள்ள காரியாயன்விளையைச் சோ்ந்த கிரிஜாவுக்கும் (38) கடந்த 2015இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ. 5 லட்சம் ரொக்கமும், 80 பவுன் நகைகளும் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம்.

இந்நிலையில் கூடுதல் வரதட்சிணை கேட்டு கிரிஜாவை வேல்முருகன் மற்றும் அவரது உறவினா்கள் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், நாகா்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்ற உத்தரவுப்படி கன்னியாகுமரி அனைத்து மகளிா் நிலைய போலீஸாா், வேல்முருகன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.