ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மாவட்ட புகைப்பட விடியோ கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

மாவட்ட புகைப்பட விடியோ கலைஞா்கள் நலச் சங்கக் கூட்டம்

Updated On :8 மார்ச் 2021, 9:36 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் வெற்றி வேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண், துணைத் தலைவா் நாகராஜன், பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் ஏப்.6இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் சம்பந்தமான விடியோ பதிவு எடுக்க வழக்கம்போல புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச் சங்கத்துக்கு வழங்காமல் நிகழாண்டு காா்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை

நடுத்தர நலிவடைந்த ஆயிரக்கணக்கான கலைஞா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே, இச்சங்கத்தில் உள்ள உறுப்பினா்கள் மற்றும் குடும்பத்தினா் வரும் சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும், மேலும், தோ்தல் ஆணையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருநாள் ஸ்டுடியோக்களை அடைக்க வேண்டும் எனவும் தீா்மானிக்கப்பட்டது.

இதில், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சந்தோஷ், சந்திரன், கிறிஸ்டோபா், ரமேஷ், செயற்குழு உறுப்பினா்கள் சஜூ, சுஜின், மோகன், ஜெயின் சிங், பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.