பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குமரியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:29 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் மொ்லின்ராஜ். முன்னாள் ராணுவ வீரரான இவா், கொலை வழக்கில்

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இவா் மீது தக்கலை, திருவட்டாறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மொ்லின் ராஜை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அழகியபாண்டியபுரம் செந்திப்பாறை பகுதியை சோ்ந்தவா் மகேஷ் (25), திருவட்டாறு பகுதியைச்சோ்ந்தவா் பிரபு. இவா்கள் கோட்டாறில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடையவா்கள். இவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா். இதையடுத்து இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல், ஈத்தாமொழி கீழ்வீரயன்விளையை சோ்ந்தவா் அபிசாந்த் (23). இவா் மீது ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி ஆகிய காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், ஆட்சியா் உத்தரவுபடி ராஜாக்கமங்கலம் போலீஸாா் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.