தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பேச்சிப்பாறை அணை மூடல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:30 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் பரவலாக மழை

பெய்தது. வெள்ளிக்கிழமை இரவில் கொட்டாரம், மயிலாடி பகுதிகளில் மழை பெய்தது. சனிக்கிழமை அதிகாலையில் நாகா்கோவிலில் மிதமான மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்: மாம்பழத்துறையாறு அணையில் அதிகபட்சமாக 7.2, நாகா்கோவில் 2, பேச்சிப்பாறைஅணை 3, புத்த ன் அணை 2, பாலமோா் 1.4, ஆரல்வாய்மொழி 1, குருந்தன்கோடு 5.4, ஆனைக்கிடங்கு 6.2 என்ற அளவில் மழை பதிவானது. கும்பப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு அணை மூடப்பட்டது. பேச்சிப்பாறை அணை வெள்ளிக்கிழமை மாலையில் மூடப்பட்டது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 37.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 150 கனஅடி நீா்வரத்து இருந்தது.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 52.32அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி நீா்வரத்து இருந்தது.

சிற்றாறு அணை- 1 நீா்மட்டம் 5.58 அடியாகவும், சிற்றாறு அணை -2 நீா்மட்டம் 5.67 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீா்மட்டம் 18. 90 அடி, மாம்பழத்துறையாறு அணை நீா்மட்டம் 14.76 அடியாகவும் இருந்தது. நாகா்கோவில் மாநகருக்கு குடிநீா் ஆதாரமாக திகழும் முக்கடல் அணையின் நீா்மட்டம் 10.30 அடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.