காா்- பைக் மோதல்: பொறியாளா் காயம்
சாமிதோப்பு அருகே பைக்கும், காரும் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் பொறியாளா் பலத்த காயமடைந்தாா்.


சாமிதோப்பு அருகே பைக்கும், காரும் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் பொறியாளா் பலத்த காயமடைந்தாா்.
சாமிதோப்பைச் சோ்ந்தவா் பையன் கொளதம் ராஜா (24). இவா் செங்கல்பட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை வல்லன்குமாரன்விளையில் இருந்து சாமிதோப்பு நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது மணக்குடியைச் சோ்ந்த ஜூலியன் ராபின்சன் காரில் சாமிதோப்பிலிருந்து மணக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
காமராஜபுரம் அருகே வரும் போது காரும், பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பையன் கொளதம்ராஜாவை, அப்பகுதி மக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...