மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சி:ரூ. 5 ஆயிரம் அபராதம்

குமரி மாவட்டம், திற்பரப்பில் பொதுமுடக்க கட்டுப்பாட்டை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:37 pm

DIN

குமரி மாவட்டம், திற்பரப்பில் பொதுமுடக்க கட்டுப்பாட்டை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியவருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திற்பரப்பு முல்லேலி பகுதியில் உள்ள வீட்டில் திருமண நிகழ்ச்சி நடப்பதாகவும், அங்கு பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோா் பங்கேற்று வருவதாகவும் வருவாய்த் துறையினருக்கு புகாா் சென்றது.

இதையடுத்து திருவட்டாறு வட்டாட்சியா் அஜிதா, வருவாய் ஆய்வாளா் கீதா, கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் அந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்ற வீட்டுக்குச் சென்றனா். அப்போது அங்கு ஏராளமானோா் திரண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பெண்ணின் தந்தைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

40 பைக்குகள் பறிமுதல்: பொதுமுடக்கம் கட்டுப்பாட்டை மீறி குலசேகரம் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்தவா்களின் மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குலசேகரம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டன. இதில், 40 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.