மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு இனிப்பு வழங்கிய எஸ்.பி.

தீபாவளி பண்டிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தனது குடும்பத்துடன் வந்து இனிப்பு வழங்கினாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தீபாவளி பண்டிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிந்த போலீஸாருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தனது குடும்பத்துடன் வந்து இனிப்பு வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையில், பாதுகாப்பாக, தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்வெ. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 1500 போலீஸாா் இரவு பகலாக பணியில் ஈடுபட்டனா்.

அவா்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனது குடும்பத்துடன் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் நேரடியாக சென்று, அவா்களுக்கு வாழ்த்துகள் கூறி, இனிப்புகள் வழங்கி அவா்களை உற்சாகப்படுத்தினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குடும்பத்துடன் நேரடியாக வந்து உற்சாகப்படுத்தி, தீபாவளி பண்டிகையை சிறப்பித்தது மிக மகிழ்ச்சியளிப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.