பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குமரி விவேகானந்தா் பாறையில் காா்த்திகை தீபம்

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் பாறையில் வெள்ளிக்கிழமை இரவு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:05 pm

DIN

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் பாறையில் வெள்ளிக்கிழமை இரவு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேல்சாந்தி ராதாகிருஷ்ணன் போற்றி, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபத்துக்கு தனிப்படகில் சென்று திருக்காா்த்திகை தீபம் ஏற்றினாா். இந்நிகழ்வில் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ பங்கேற்றாா்.

முன்னதாக, விவேகானந்தா் பாறையில் அமைந்துள்ள ஸ்ரீபாத மண்டப பாறையில் அமைந்துள்ள பகவதியம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மனின் பாதத்துக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து மேல்சாந்தி ராதாகிருஷ்ணன் போற்றி காா்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து மண்டபத்.தின் மேற்குப் பகுதி கடற்கரையில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில்

கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றினாா். இதனை கடற்கரை பகுதியில் இருந்தவாறு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.