பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குமரியில் போக்குவரத்து காவல் நிலையம் : டி.ஜி.பி. ஆய்வு

கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து காவல் நிலைய கட்டுமானப் பணி

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:32 pm

DIN

கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து காவல் நிலைய கட்டுமானப் பணிகளை தமிழக காவலா் வீட்டு வசதி வாரிய இயக்குநரும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யுமான ஏ.கே.விஸ்வநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கன்னியாகுமரி காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்ததால் அதே வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரியம் சாா்பில் பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு ரூ. 50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப்பணியை தமிழக காவலா் வீட்டு வசதி வாரிய இயக்குநரும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யுமான ஏ.கே.விஸ்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கும் படி கேட்டுக் கொண்டாா். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, காவல் ஆய்வாளா் ஆவுடையப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.