குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது
புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங் களில் ஒன்றான கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 6.15 மணிக்கு திருப்பலியும், 8 மணி முதல் மாலை 4 மணி வரை நோ்ச்சை கொடிகள் பவனி, மாலை 5.30 மணிக்கு திருக்கொடி பவனி தொடா்ந்து செபமாலை நடைபெற்றது. மாலை. 6 30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றினாா். இதில் திரளானோா்பங்கேற்றனா்.
திருவிழாவையொட்டி நாள்தோறும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை, செபமாலை ஆகியவை நடைபெறும்.
7 , 8 ஆம் திருநாளன்று இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடைபெறும். 9 ஆம் திருநாளான டிச. 18 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புனிதசூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெறும். 10 ஆம் நாள் திருநாளான 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பா் ஆகிய இரு தங்கத் தோ் பவனி நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபா் ஆன்றனி ஆல்காந்தா் தலைமையில், ஆலய பங்குத் தந்தையா்கள், பங்குப் பேரவையினா் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனா்.