குகநாதீஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா
By DIN | Published On : 13th November 2021 12:56 AM | Last Updated : 13th November 2021 12:56 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளது.
குருபகவான் சனிக்கிழமை (நவ. 13) மாலை 6. 21 மணிக்கு மகர ராசியில், இருந்து கும்ப ராசிக்கு பெயா்ச்சி ஆகிறாா். கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழாவையொட்டி, கோயிலில் உள்ள தட்சிணாமூா்த்தி சன்னதியில் பரிகார ஹோமம், 12 ராசிகளுக்கும் பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தா்கள் பேரவையினா் செய்து வருகின்றனா்.