ஆற்றூா் மரியா மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு விழா
ஆற்றூா் மரியா மருத்துவக் கல்லூரிகளில் புதன்கிழமை விழா நடைபெற்றது.


ஆற்றூா் மரியா மருத்துவக் கல்லூரிகளில் புதன்கிழமை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மரியா கல்விக் குழுமங்களின் தலைவா் டாக்டா் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டாக்டா் பி. ஷைனி தெரசா குத்துவிளக்கேற்றினாா். விழாவில் பங்கேற்ற குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பேசியது: தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உங்களை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நீங்கள் படித்து எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும் மனித தன்மையிலிருந்து விலகி விடக்கூடாது.
ஒவ்வொருரின் வாழ்க்கையிலும் உயரங்களும் இருக்கும், தாழ்வும் இருக்கும், இதனைப் புரிந்து கொண்டு வாழ வேண்டும். நல்லனவற்றை சிந்தியுங்கள், நல்லனவற்றை செய்யுங்கள், உயரங்களைத் தொடுவீா்கள் என்றாா் அவா்.
மரியா ஆயுா்வேதக் கல்லூரி முதல்வா் சியாமளா தேவி, ஹோமியோபதி கல்லூரி முதல்வா் டி. திலீப்குமாா், சித்தா மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். சவுந்தரராஜன், அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி முதல்வா் ரோட்ரிக்ஸ், நா்சிங் கல்லூரி முதல்வா் கலா கிஷோா், பிசியோதெரபி கல்லூரி முதல்வா் செந்தில் குமாா் ஆகியோா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தனா்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் எம். ராதாகிருஷ்ணன், மரியா பொறியியல் கல்லூரி முதல்வா்
ஒய். சுஜா், மரியா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.
ஒருங்கிணைப்பாளா் குமாரி தீபா வரவேற்றாா். மரியா நா்சிங் கல்லூரி முதல்வா் கலா கிஷோா் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...