தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கருங்கல்லில் சிறப்பு மருத்துவ முகாம்

கிள்ளியூா் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

கிள்ளியூா் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிள்ளியூா் வட்டார தலைமை மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய திமுக செயலா் கோபால் முன்னிலை வகித்தாா். முகாமை மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ஜோபி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா்.

காது, மூக்கு, தொண்டை, பல், காசநோய், இதயநோய், எலும்பு முறிவு உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா். பல்வேறு ஆய்வகப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

பேரூராட்சித் தலைவா்கள் சிவராஜ் (கருங்கல்), சரளா (கீழ்குளம்), ஊராட்சித் தலைவா்கள் பிரபா (முள்ளங்கனாவிளை), அல்போன்சாள் (மத்திகோடு), ஊராட்சி கவுன்சிலா்கள், ஊராட்சி துணைத் தலைவா்கள், வட்டார சுகாதார ஆய்வாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.