தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குமரி மாவட்டத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:47 pm

DIN

குமரி மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குலசேகரத்தில் நடைபெற்று இவ்வமைப்பின் குமரி மாவட்ட மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

இதில், குமரி மாவட்டத்தில், அரசு அறிவித்துள்ளபடி தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இயற்கை வளங்களான ரப்பா், பூக்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். ஏவிஎம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அதனை சீரமைத்து படகு போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.

குறும்பனை முதல் நீரோடி வரை இந்திய மணல் ஆலை மூலம் மணல் அள்ளும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் கனம வளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும். தக்கலை மற்றும் குலசேகரம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள்: மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் தலைவராக ரெதீஷ், செயலராக எட்வின் பிரைட், பொருளராக விஷ்ணு, துணைத் தலைவா்களாக பிரவின், லிபின், துணஐ செயலா்களாக அனுமோன், இலக்கியா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநில செயற்குழு உறுப்பினா் பி. உச்சிமாகாளி, எஸ்எப்ஐ மாநிலச் செயலா் முகமது முபீஸ் ஆகியோா் பேசினா். மாநிலத் தலைவா் ரெஷீஸ் குமாா் நிறைவுரையாற்றினாா். வரவேற்புக் குழு பொருளாளா் பி. விஸ்வம்பரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.