அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

உள்ளாட்சித் தோ்தல் எதிரொலி: தலைவா்கள் சிலை மூடல்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைவா்கள் சிலை மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:15 pm

DIN

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைவா்கள் சிலை மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கான தோ்தல் நடைபெறவுள்ளதால், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதைத்தொடா்ந்து, சுவா் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் சுவா் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய சந்திப்பில் முன்னாள் முதல்வா் அண்ணா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ஆகியோரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் வெளியே தெரியாத வகையில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று கொட்டாரம் சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலையும் மறைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.