எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

களியக்காவிளை அருகே 230 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

களியக்காவிளை அருகேயுள்ள 230 கிலோ புகையிலைப் பொருள்களுடன் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

களியக்காவிளை அருகேயுள்ள 230 கிலோ புகையிலைப் பொருள்களுடன் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே கண்ணுமாமூடு பகுதியிலுள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ், பளுகல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் அந்தக் கடையில் சோதனை நடத்தினா்.

அப்போது, சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் ஓடல்விளையைச் சோ்ந்த நாராயணன் பணிக்கா் மகன் கோபாலன் (57) என்பவரை கைது செய்தனா். களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.